சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகரித்துவரும் காச நோயாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்துவதற்கு கல்முனை பிராந்திய மார்பு சிகிச்சை நிலையம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ எல் எம் றிபாஸ் வழிகாட்டலுக்கு அமைய பிராந்திய மார்பு சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ எச் திலிப் மபாஸ் இதற்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இதற்கமைய சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மார்பு சிகிச்சை நிலையத்தின் பிரிவு ஒன்று புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ளது
இங்கு நீண்டகால சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு 3 வது வாரத்தில் விஷேட சிகிச்சைக்கு உட்படுத்தப்பட உள்ளன குறிப்பிடத்தக்கதாகும்
0 comments :
Post a Comment