முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிர் நீத்த தமிழ் இன உறவுகளை நினைவு கூர்ந்து ஏற்பாடு செய்த தீபச் சுடர் ஏற்றி முள்ளிவாய்க்கால் கஞ்சு வழங்கும் நிகழ்வு (16) கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் கல்முனை நகரின் பிரதான வீதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரி. கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடிஸ்வரன் ,முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பி.அரியநேந்திரன், என். சிறிநேசன் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். ராஜேஸ்வரன், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வீதி வழியாக பயணித்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சு வினியோகிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment