உரிமைக்காகவும் , தியாகத்திற்காகவும் உருவானதும் , உழைக்கும் வர்க்கத்தினரின் மகத்துவத்தை பறைசாற்றும் தினமாகவும் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 01 ம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. உழைக்கும் வர்க்கத்தினரின் இந்த உன்னத தினத்தில் எமது உரிமைகளையும் சமத்துவத்தையும் காப்பது எமது தலையாய கடமையாகும்.இன்றைய சூழ்நிலையில் நாம் மிகவும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம்.சமூக மாற்றத்தின் உயிர் விசையான உழைக்கும் மக்கள் அமைப்பு சார்ந்த உரிமைப் போராட்ட எழுச்சி நாள் மே முதல் நாள் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உழைக்கும் மக்களின் உரிமைக்காக பாடுபடுகின்ற சக்திகளை ஒன்று திரட்டி மேலும் மேலும் வெற்றிகள் குவிக்க உழைப்போம். உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் நன்னாளாகவும் மே தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் எமது நாட்டின் முதுகெலும்பாக திகழும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வளர்ச்சியை மனதில் கொண்டு இந்த அரசாங்கம் அக்கறையோடு செயல்பட வேண்டும். உடலை இயந்திரமாக்கி, வியர்வை துளிகளால் உலக வரைபடத்தை வார்த்தெடுக்கும் தொழிலாளர்கள் சகல உரிமைகளையும் வெற்றிகளையும் பெற்று வாழ வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment