நாட்டு நிலைமைகளை கவனத்தில் வைத்து ஏனையோரின் நிலை புரிந்து எமது செயல்களை அமைத்துக்கொள்வோம். நன்மையான காரியங்கள் ஆற்றுவதில் ஆர்வம் கொள்ளவோம்.
பந்த இணைப்பாம் உறவுகளைப் பேண தேவையான பயன்மிக்க செயல்களை மேற்கொள்வதற்கு இதுவே உகந்த காலம். எனவே எமது உறவுப்பாலத்தை பலப்படுத்தும் நற்பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்வோம்.
பரஸ்பரம் கோபம், சண்டை சச்சரவு, பொறாமை ஆகியவற்றை விட்டொழித்து.
, இத்தகைய இழிகுணங்களிலிருந்து உள்ளத்தைத் தூய்மைப் படுத்தி பரஸ்பரம் அன்பைப் பேணி ஒருவருக்கொருவர் உடன்பிறவா சகோதரர்களாய் ஒரே குடும்பமாய் வாழ வழி வகுப்போம்.
இந்த உன்னத நாளில் ஏழை, எளியோர், அநாதைகள் மீது கருணை பொழிந்து, இந்தப் புனித பெருநாள் தினத்தில் அவர்களின் துயர்துடைத்து வாழ்வில் மகிழ்வு பொங்கிட தான தர்மங்கள் வழங்கி உதவுவோம்.
இத்தகைய சிறந்த பெருநாளைக் கொண்டும் அனைத்து சொந்தங்களுக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஸப்வான் சல்மான்
கொள்கை பரப்புச் செயலாளர்
ஐக்கிய காங்கிரஸ் கட்சி
0 comments :
Post a Comment