ஆலயத்திற்கு உதவியஅன்பர்களுக்கு மடத்தடியில் பணி நயப்புவிழா! இ.கி.மிசன் மட்டு.சுவாமி நீலமாதவானந்தா ஜீ பிரதமஅதிதி



காரைதீவு சகா-
ஹா கும்பாபிசேகம் கண்ட வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு பல்வேறு கோணங்களிலும் தொண்டாற்றி பணிசெய்து உதவிய அன்பர்களுக்கு ஆலய அன்னதான மண்டபத்தில் பணிநயப்புவிழா வெள்ளியன்று(29) இடம்பெற்றது.

இப்பணிநயப்பு விழா ஆலய அறங்காவலர்சபைத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் அறங்காவலர்சபை ஆலோசகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாவின் றெநிப்படுத்தலில் நடைபெற்றது. விழாவிற்கு முதன்மை அதிதியாக இராமகிருஸ்ணமிசனின் மட்டு.மாநில உதவிமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் கலந்து சிறப்பித்தார். ஆன்மீகஅதிதியாக ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் ஆசியுரை வழங்கினார்.

முதலாம்கட்ட பணிநயப்புவிழாவில் ஆலய அறங்காவலர்சபைர் மற்றும் மண்டலாபிசேகபூஜை உபயகாரர்கள் ஆகியோருக்கு இறைநேசர் என்ற பட்டம் வழங்கி பாராட்டுமடல் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அதே அன்னதான மண்டபத்தில் அன்னதானம் இடம்பெற்றது.

இரண்டாம்கட்ட பணிநயப்புவிழா சங்காபிசேகத்தில் நடைபெறும்.அத்தருணம் ஆலய கட்டுமானப்பணிகள் மற்றும் பேருதவி புரிந்த பரோபகாரிகளுக்கு இறைபணிச்செம்மல் என்ற பட்டமும் கிரியைகளில் ஈடுபட்ட சிவாச்சாரியார்களுக்கு மீனாட்சிதுரந்தரர் என்ற பட்டமும் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :