மகிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் (2018) அமோக வெற்றி பெற 02 வருடங்கள் போதுமானதாக இருந்தது.
அதிலிருந்து மீண்டும் மகிந்த ஆட்சியைக் கைப்பற்ற 02 வருடங்கள் போதுமானதாக இருந்தது.
ஆட்சிக்கு வந்த மகிந்தவின் ஆட்சி மீது அதிப்தி ஏற்பட 02 வருடங்கள் போதுமானதாக இருந்தது.
ஒரு ஆசனத்தை மட்டும் வைத்திருந்த ரணில் பிரதமாராக 02 வருடங்கள் போதுமானதாக இருந்தது.
எனவே, இன்னும் 02 வருடங்களில் எதுவும் நடக்கலாம் இல்லையா?
2014 இல் புலியாக சித்தரிக்கப்பட்ட ரணில் 2015 இல் பிரதமரானார்.
2009 களில் புலிகளை தோற்கடித்த மகிந்த 2015 இல் தோற்கடிக்கப்பட்டார்.
2020 இல் பூச்சியமாக தோற்கடிக்கப்பட்ட ரணில் 2022 இல் பிரதமராகியுள்ளார்.
எனவே, 2023 இல் எதுவும் நடக்கலாம் இல்லையா?
22,000 கோடியை கொள்ளையடித்து விட்டார்கள் என - 2015 இல் மகிந்தவை குற்றம் கண்ட அதே மக்கள்தான் - அதனை மறந்து 2019 இல் அவருக்காக அவருடைய தம்பியை ஜனாதிபதியாக்கினார்கள். பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை கொடுத்தார்கள்.
மத்திய வங்கி பிணை முறியில் 11 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்ளையடித்ததாக குற்றம் சுமத்திய ரணிலை தூக்கி வீசிய அதே மக்கள்தான் - அதனை மறந்து பிரதமராக இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.
எனவே, நாளை எதுவும் நடக்கலாம் இல்லையா?
எனவே, ராஜபக்சக்கள் அழிந்துவிட்டதாக யாரும் எண்ணினால் - அது அவர்களின் தவறு இல்லையா?
20015 இல் மொத்தமாக அதிகாரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ராஜபக்சக்களினால் - மீண்டும் ஜனாதிபதியாகவும் பிரதமாராகவும் வந்து நாட்டை ஆள முடியுமென்றால் - சர்வ அதிகாரத்தையும் குவித்து வைத்துள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை இன்னும் கையில் வைத்திருக்கும் ராஜபக்ச குடும்பம் - மீள எழும் என்பது சாத்தியமானது இல்லையா?
ரணில் பிரதமரானாலும் - ரணிலுக்கான பாராளுமன்ற பலத்தை (மூக்கணாங்கயிற்றை) கையில் வைத்திருக்கும் ராஜபக்ச குடும்பம் - எப்போது வேண்டுமென்றால் மீள அதிகாரத்தை கையில் எடுக்கலாம் இல்லையா?
இதற்கு மேலதிகமாக, ரணில் தனது பாராளுமன்ற பலத்திற்காக முற்றுமுழுக்காக நம்பியிருக்கும் ராஜபக்சவினருக்கு எதிராக - அவர்களை பாதிக்கும் எதனையும் செய்வாரா? செய்யத்தான் முடியுமா?
எனவே, ராஜபக்சக்களை காப்பாற்றியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் அவர் மீதிருக்கின்றது இல்லையா?
அதற்கான வழிகளை ரணில் திறக்காதிருக்காமலிருக்க விரும்பினாலும் - முற்றாக மூடுவது முடியாத காரியமில்லையா?
எனவே, பூச்சியத்திலிருந்து ரணில் மீண்டதைப் போல - ராஜ்ஜியத்தை மீளக்கைப்பற்ற ராஜபக்சர்கள் மீண்டும் வருவார்கள். அந்த ஆபத்தின் ஒரு சமிக்ஞையே ரணில்.
அதிமேதாவித்தனம் பேசிக்கொண்டு அனைவரையும் விமர்சித்துக்கொண்டிருக்கும் சோனிக் காக்காமார்களே?
Rajapakshas are on the way.
Get ready to celebrate.
சிறுவால்களை தயாரபடுத்திக்கொள்ளுங்கள்...சிக்காமல் ஓடித்தப்புவதற்கு!
0 comments :
Post a Comment