ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்மாதிரியான ஆட்சியாளராகத் திகழ்ந்த ஷேக் கலீஃபா பின் சயீத் அவர்களின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!



ஊடகப்பிரிவு-
க்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அவர்களின் மறைவினால், அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பிலும் துயரத்திலும் தானும் பங்கேற்பதாகவும், அவரது மறைவு தமக்கு பெரும்கவலை தருவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அனுதாபச் செய்தியில்,

“ஷேக் கலீஃபா பின் சயீத் அவர்கள் ஒரு முன்மாதிரியான ஆட்சியாளராகத் திகழ்ந்தவர். மிகவும் அர்ப்பணிப்புள்ள ஆட்சியாளரான அவரை, ஐக்கிய அரபு அமீரக மக்கள் இன்று இழந்து தவிக்கின்றனர். அவருடைய ஆட்சியின் கீழ் ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் விரிவானதும், விரைவானதுமான அபிவிருத்தியை ஈட்டிக்கொண்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை

எல்லாம் வல்ல அல்லாஹ், அவருடைய சேவைகளையும் நற்கருமங்களையும் பொருந்திக்கொண்டு, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் உயர்ந்த இடத்தைப் பரிசளிப்பானாக!” என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :