ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் பேச்சு நடத்த தயார்
நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க 19 மீள அமுல்
புதிய அரசு இவ்வாரத்துக்குள் ஸ்தாபிப்பு
" ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய அரசை ஸ்தாபித்து, நாட்டில் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்திய பின்னர், இது சம்பந்தமாக பேச்சு நடத்தி, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்."
இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய உரையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் உரையில் முக்கிய அம்சங்கள் வருமாறு,
இவ்வாரத்துக்குள் புதிய அரசு ஸ்தாபிக்கப்படும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள அதேபோல மக்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய ஒருவரை பிரதமராக்கி, புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்பின்னர் நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கக்கூடிய வகையில் '19' ஐ மீள அமுலாக்கும் வகையில் அரசமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்.
ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை முன்வைத்துள்ளனர். புதிய அரசு, நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், அந்த கோரிக்கை தொடர்பில் பேச்சு நடத்தி, தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், அரச நிர்வாக பொறிமுறையை செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள்.
0 comments :
Post a Comment