கிழக்குமாகாண கல்வி கலாச்சார விளையாட்டுத்துறை திணைக்களம் நடத்திவரும் கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.
பெரு விளையாட்டுப் போட்டிகளில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை சாதனை படைத்துள்ளது.
குறிப்பாக 20 வயதுக்கு கீழ்பட்டபெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் முதலிடத்தையும் 20 வயதுக்குட்பட்ட கீழ் பட்ட பெண்களுக்கான எல்லே போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று அதேவேளை 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இவ் அணியினரைப் பாராட்டும் நிகழ்வு கல்லூரி அதிபர் செ.கலையரசன் தலைமையில் நடைபெற்றது. கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நான்கு பாடசாலைகளும் எல்லே மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் தலா ஐந்து பாடசாலைகளும் பங்குபற்றின.
இருபது வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் தீவிர சாதனை படைக்கப்பட்டு இருக்கின்றது. இறுதிப்போட்டியில் கல்முனை உவெஸ்லி உயர்தர கல்லூரியும் கல்முனை ஆர் கே எம் மகா வித்தியாலய அணியும் போட்டியிட்டன.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை உவெஸ்லி கல்லூரி அணி 84 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை ஆர் கே எம் வித் தியாலயம் 30 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது அதன் காரணமாக 54 ஓட்டங்களால் உயர்தர பாடசாலையின் பெண்கள் அணி வெற்றி ஈட்டியது .
மட்டஇதில் 65 ஓட்டங்களை தன்னந்தனியனாக நின்று வீராங்கனை செல்வி.வி.பிரசாந்தி அந்த ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
அவரையும் அவரது அணியினரையும் அதிபர் செ. கலையரசன் பாராட்டினார் . மாகாணத்திற்கு தெரிவான ஏனைய குழுக்களையும் அதிபர் பாராட்டினார்..
0 comments :
Post a Comment