தீச்சுவாலைக்குள் பாய்ந்து புத்தர்சிலையை மீட்ட முஸ்லிம் சிறுமி



அஷ்ரப் அலீ-
(ஊர், பெயர்கள் மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக்குக் காரணமான ஆளுங்கட்சி அமைச்சர்களின் வீடுகள் ஆங்காங்கே பொதுமக்களால் தீவைத்து எரிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் வீடும் அவ்வாறு தீ வைக்கப்பட்ட சம்பவம் கேள்வியுற்று பிரதேசத்தின் பொதுமக்கள் அந்த வீட்டின் முன் திரண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஏராளம் பொதுமக்கள் அங்கு திரண்டிருந்தனர். அமைச்சரின் வீட்டில் நாலாபுறமும் தீச்சுவாலைகள் எழுந்து கொழுந்து விட்டெரியத் தொடங்கியது
அப்போதுதான் சனக்கூட்டத்தின் மத்தியில் நின்றிருந்த இளம் சிறுமி ஒருவர் சட்டென்று எரிந்து கொண்டிருந்த வீட்டுக்குள் அதிவேகத்தில் ஓடினார். அது கண்ட அனைவரும் வீட்டுக்குள் போக வேண்டாம் என்று பதற்றத்துடன் கூச்சலிட்டனர்.
சில வினாடிகளுக்குள் அந்தச் சிறுமி இரண்டு கைகளிலும் ஏந்தியபடி ஒரு புத்தர் சிலையுடன் தீச்சுவாலைகளின் மத்தியில் இருந்து வௌிப்பட்டார். அதனை அங்கிருந்த முன் பின் அறிமுகமற்ற இன்னொரு இளம் பெண்ணிடம் கையளித்தார்.
''புத்தர் பாவம் அக்கா. இன்னும் கொஞ்ச நேரத்தில் சிலை எரிஞ்சிருக்கும். இதை நீங்கள் கொண்டு ​போய் வைத்துக் கொள்ளுங்கள்" அந்தச் சிறுமி கூறினார்.
"நீயே எடுத்துப் போகலாமே? ஏன் என்னிடம் தருகின்றாய்? சிலையை வாங்கிக் கொண்ட இளம் பெண் அந்தச் சிறுமியிடம் பதி்ல் வினாத் தொடுத்தார்.
அதற்கு அந்தச் சிறுமி அளித்த பதில் அங்கிருந்த அனைவரையும் பெரும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது
"அக்கா.. நான் ஒரு முஸ்லிம். நாங்கள் சிலைகளை கும்பிடுவதில்லை. அதுதான் உங்களிடம் தந்தேன்."
கூறிவிட்டு அந்தச் சிறுமி தன் பாட்டில் சென்றுவிட்டார். அங்கிருந்த அனைத்து சிங்கள மக்களும் அந்தச் சிறுமியின் செயல் குறித்து வாயாரப் பாராட்டுத் தெரிவித்தனர்.
இது ஒரு உண்மைச் சம்பவமாகும். பாதுகாப்பு கருதி பெயர்கள் மற்றும் சம்பவம் நடைபெற்ற இடம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுதான் இலங்கை மக்களின் சமூக நல்லிணக்கமாகும். சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று நாங்கள் மதங்களால் , மொழியால் பிரிந்திருந்தாலும் அனைவரும் ஒரே இனம் என்பதைத் தான் அந்தச் சிறுமியின் துணிகர செயல் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த ஒற்றுமையை பேணிக் கொள்வோம். நல்லிணக்கத்தை பலமானதாக கட்டியெழுப்பிக் கொள்வோம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :