கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் புத்தக கல்வியோடு மாணவர்களிடையே மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணரும் நோக்கில் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர்களை பங்கு கொள்ளச் செய்யும் வகையில் கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களின் ஆலோசனையின் பேரில் கடற் பயிற்சி பாசறையொன்று அண்மையில் ( 12 )கல்லூரி திறந்தவெளியரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ரன்தம்பே தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ள விசேட கடற்படை பயிற்சிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் வகையில் மாணவர்களுக்கான முன் ஆயத்த பயிற்சிகளை வழங்கும் வகையில் கல்லூரியின் கடற்படை பொறுப்பாசிரியர் பெலடூன் கொமாண்டர் மேஜர் கே.எம்.தமீம் அவர்களின் கண்காணிப்பின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சிகளும் அனுபவ ரீதியிலான பகிர்வும் இடம்பெற்றன..
0 comments :
Post a Comment