முஸ்லிம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய வேலைத்திட்டம் இன்று (05) நாடு பூராகவும் நடைபெற்றன. கல்முனை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடு இன்றைய தினம் சுமூகமாக நடைபெற்றன. மருதமுனை அல்- ஹிக்மா ஜூனியர் பாடசாலையில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வித்தியாரம்ப விழா பாடசாலையின் அதிபர் எம்.எல். முஹம்மட் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே. ஜெயந்திமாலா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் கலந்து கொண்டார்.
தரம் இரண்டு மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். முதல் நாளான இன்றைய தினம் தரம் ஒன்று மாணவர்கள் அவர்களுடைய முதல் எழுத்தை அட்டைகளில் எழுதி காட்சிப்படுத்தினார். இதனை அடுத்து பாடசாலையில் இணைந்து கொண்ட சகல புதிய மானவர்களுக்கும் புத்தகப் பை அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஷம்ஸ் தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், அபிமானிகள், பெற்றோர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment