சஜித் அணி இருவருடன் சிலர் அமைச்சுக்களைப் பெற்றனர்!



ஆர்.சனத்-
இராஜாங்க அமைச்சராக விரட்டப்பட்ட சுசில் அமைச்சராக மீண்டும் உள்ளே...
சஜித் அணி உறுப்பினர்கள் இருவருக்கும் அமைச்சு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் ஒன்பது அமைச்சர்கள் இன்று (20) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி மாளிகையில், பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார ஆகியோருக்கும் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதியால் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்ட, சுசில் பிரேமதாச ஜயந்தவுக்கும் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் விவரம் வருமாறு ,
1.நிமல் சிறிபாலடி சில்வா - துறைமுகம், கப்பல்துறை, விமானசேவை.
2. சுசில் பிரேமஜயந்த - கல்வி.
3.கெஹலிய ரம்புக்வெல்ல - சுகாதாரம்.
4.விஜயதாச - நீதி, சிறைச்சாலைகள், அரசமைப்பு மறுசீரமைப்பு.
5. ஹரின் பெர்ணான்டோ - சுற்றுலாத்துறை, காணி.
6.ரமேஷ் பத்திரண - பெருந்தோட்டத்துறை.
7. மனுச நாணயக்கார - தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு.
8. நளின் பெர்ணான்டோ - வர்த்தகம், கைத்தொழில், உணவு பாதுகாப்பு.
9. டிரான் அலஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்.
தினேஷ் குணவர்தன, ஜி.எல்.பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர ஆகிய நால்வரும் ஏற்கனவே அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :