நெடுநாட்களுக்கு பிறகு காங்கிரஸில் ஏற்பட்டுள்ள மாற்றம்....!



ஆர்.சனத்-
லங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான இலங்கை - இந்திய காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்களுள் ஒருவரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின், உருவப்படம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கொட்டகலை அலுவலகத்தில் (சிஎல்எப்) குறித்த உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.
 
மலையக காந்தி என போற்றப்படும் கே .இராஜலிங்கம் ஐயா, கண்டி மாவட்டத்தின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. (1947)
மக்களுக்காகவும், மக்களுக்கான தொழிற்சங்க - அரசியல் பணிகளை முன்னெடுப்பதற்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த இராஜலிங்கம் ஐயா, மறைந்த பின்னர் காங்கிரஸில் அவருக்கான மரியாதை கிட்டவில்லை. ராஜலிங்கம் ஐயாவின் குடும்பமும் ஓரங்கட்டப்பட்டது.
இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காகவே வாழ்ந்த ஒருவருக்க, மே தினத்தில் இப்படியாவது அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சியே.
இராஜாலிங்கம் ஐயா குறித்து நான் ஏற்கனவே பதிவிட்டிருந்த பதிவு.......
யார் தலைவர்?
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கண் திறப்பதற்காக சொந்த சொத்துகளையெல்லாம் விற்பனை செய்துவிட்டு பாடசாலை அமைத்த மகான் இவர். (இன்றைய புஸல்லாவை, சரஸ்வதி தேசிய கல்லூரி)
அரச பதவியை துறந்துவிட்டு, கூடாரம் அமைத்து தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி அமுதூட்டிய ஆசான் இவர். (சங்குவாரி தோட்டம்)
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக தான் பயணித்த காரையே விற்பனை செய்துவிட்டு, பொது போக்குவரத்தில் வீடு திரும்பிய கர்ணன்.
குடும்ப வாழ்வில் இணைந்தால் சமூகப்பணிக்கு தாக்கம் வந்துவிடும் என்பதால் இறுதிவரை திருமணம் முடிக்காமல் தான் சார்ந்த மக்களுக்காகவே வாழ்ந்த தொழிற்சங்க துறவி இவர்.
யாரென தெரிகிறதா?
இவர்தான் மலையக காந்தி என போற்றப்படும் கே. இராஜாலிங்கம் ஐயா.
கண்டி மாவட்டத்தின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் (1947 - நாவலப்பிட்டிய தொகுதி)
இன்றைய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான இலங்கை - இந்திய காங்கிரஸின் ஸ்தாபக பொதுச்செயலாளர். தலைவர் பதவியையும் வகித்தவர்.
குடும்பத்துக்கென எதையும் சேமித்து வைக்கவில்லை. குடும்ப வசம் இருந்த சொத்துகளையெல்லாம் சமூகத்துக்காகவே தானம் செய்தவர்.
இன்று அவரின் குடும்பம், வீடு உறுதிப்பத்திரம்கூட இன்றி வாழ்கின்றது. நாளை வெளியேற வேண்டும் என தோட்ட நிர்வாகம் கட்டளையிட்டால், வெளியேற வேண்டிய நிலை.
இவரின் பெயரில் சங்குவாரியில் இராஜலிங்கம் புரம் எனும் வீட்டுத் திட்டம் தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆனால் மலையக அரசியல்வாதிகள் இவர்களின் குடும்பத்துக்கு ஆயிரம் உறுதிமொழிகளை வழங்குகின்றனர். இன்னும் எதுவும் நடந்தபாடில்லை.
தலைவர் பற்றி தற்போது அதிகம் பேசப்படுகின்றது. இப்படியான தலைவர்களை பற்றியும் தெரிந்துகொள்வோம்.
இராஜாலிங்கம் ஐயாவின் வாழ்க்கை வரலாறு
http://pachaithangam.blogspot.com/2018/05/blog-post_31.html See less
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :