ஊடகவியலாளர்களின் பணிக்கு குந்தகம் விளைவித்து தாக்கப்பட்டமை மற்றும் ஊடக உபகரணங்களை பறிமுதல் செய்தமை தொடர்பில் கடுமையான கண்டனங்களையும் கவலையையும் தெரிவிப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அட்டாளைச்சேனை பாலமுனை பிரதேசத்தில் கடந்த வியாழன் இரவு இடம்பெற்ற சம்பவமொன்றில்
ஊடகவியலாளர் ஷஹீர் கான் பாரூக் தாக்கப்பட்டதுடன், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அவரது கமரா மற்றும் ஒரு தொகை பணத்தையும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்கப்பட்ட ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
ஊடகவியலாளர்களின் பணிக்கு குந்தகம் விளைவித்து தாக்கப்பட்டமை மற்றும் ஊடக உபகரணங்களை பறிமுதல் செய்தமை தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கடுமையான கண்டனங்களையும் கவலையையும் தெரிவிக்கின்றது.
இனிவரும் காலங்களில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாமல் இருக்க வழியமைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வதோடு, ஊடகவியலாளர்களின் பணிகளை சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் மேற்கொள்ள உரிய தரப்பினர் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment