சாய்ந்தமருது கமு/ரியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தின் வித்தியாரம்பவிழா நேற்று (05)ல் வெகுவிமர்சையாக நடைபெற்றது .
“உலகை வெல்லும் கல்வியை கற்க தயாராகுவோம்” எனும் கருப்பொருளில் ஆரம்பமான விழாவுக்கு இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் நீதவான் ஓய்வுபெற்ற கெளரவ மைமூனா அஹமட் அவர்கள் பிரதம அதிதியாகக கலந்து கொண்டார்கள்.
பாடசாலை அதிபர் ஏ. முஹம்மட் அன்சார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கெளரவ அதிதிகளாக மாவட்டப் பொறியியலாளர் ஏ.எம். ஸாஹிர், மற்றும் பறக்கத் டெக்ஸ் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஏ. பரீட் அவர்களும், விஷேட அதிதிகளாக கல்முனை கல்வி வலயத்தின் ஆரம்ப பாடசாலையின் பாடவிதான இணைப்பாளர் திரு. ரி. கிருணிதாசன் முன்னாள் மாவட்டக்காணி பதிவாளர் முசத்திக் ஜே முகம்மட், ஆசிரியர் ஆலோசகர் ஷியாம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மிகச்சிறப்பாக நடைபெற்ற இத்நிகழ்வுக்காக உழைத்த பிரதி அதிபர், உதவி அதிபர் தரம் 1ம், 2ம், ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்குழாம், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment