கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கடந்த தமிழ் சித்திரை புத்தாண்டினை முன்னிட்டும்,கடந்த ரமழான் பெருநாளினை முன்னிட்டும் இரண்டு நிகழ்வுகளையும் ஒன்றாக ஒற்றுமையாக கொண்டாடும் ஒரு பெறுமதியான நிகழ்வாக நேற்று(09) கல்முனை வலயக் கல்வி அலுவல்களில் கணக்காளர் வை.ஹபிபுல்லாவின் ஒருங்கிணைப்பில் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் உத்தியோகத்தரகளின் கலை.கலாச்சார நிகழ்வுகளோடு நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரை புத்தண்டு இனிபுப் பண்டங்கள்,சாப்பாடுகள் பகிர்ந்தளிப்பு செய்யப்பட்டு ஒற்றுமையாக இவ் இரு நிகழ்வுகளையும் கொண்டாடினர்.
மேலும் இந் நிகவில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,உதவி கல்விப் பணிப்பாளர்கள்,பொறியியலாளர், ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment