சமூக மாற்றத்திற்கு ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பெரியது - தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
மூகத்தில் ஏற்படுகின்ற ஆரோக்கியமான மாற்றத்திற்கு ஊடகவியலாளர்கள் ஆற்றி வருகின்ற பங்கு அளப்பரியதாகும் என்று இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2017 /2018 கல்வியாண்டில் டிப்ளோமா பட்டத்தை பூர்த்தி செய்த மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு (24) ஒலுவில் பறன் தோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே உபவேந்தர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

தகவல் பரிமாற்ற உலகில் ஊடக துறையின் வகிபங்கு பெறுமதியானதாகும். இன்றைய பல்லின அரசியல், சமூக, கலாசார, பண்பாட்டு சூழலில் ஊடகத்துறை மற்றும் ஊடகவியலாளர்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதேபோன்று ஊடகவியலாளர்களின் பணிகளை செம்மைப்படுத்துவதற்கு இது போன்ற கற்கை நெறிகள் முக்கியமானதாகும்.

சமூக நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும், வினைத்திறனான சேவைக்கும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆற்றுகின்ற பணி மெச்சத் தக்கதாகும். ஊடகவியலாளர்களை மக்கள் நம்புகிறார்கள். எனவே அதற்கேற்றாற் போல் உண்மைத் தன்மையான செய்திகளை வெளியில் கொண்டு வருவதற்கு ஊடகங்கள் இன்னும் பணியாற்ற வேண்டியுள்ளது. இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா கற்கை நெறியை பட்டப் படிப்பாக முன் கொண்டு செல்வதற்கு எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.

எமது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரண்டாவது தொகுதி மாணவர்களாக பட்டத்தை பூர்த்தி செய்துள்ள இந்த மாணவர்களின் விழாவினை மிகவும் பிரம்மாண்டமான முறையில் அடுத்த மாதம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை நெறியின் இணைப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம். எம். பாஸில், சமூகவியல் துறைத்தலைவர் கலாநிதி எஸ்.எம்.ஐயூப், வெளிவாரி கற்கை நிலைய உதவிப் பதிவாளர் எஸ்.சிவகுமார், வெளிவாரி கற்கை நிலைய உத்தியோகத்தர் எஸ்.எம்.சதாம் ஹுசைன், உட்பட டிப்ளோமா பட்டத்தை பூர்த்தி செய்து கொண்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :