தம்பி மஹிந்தவின் நிலை குறித்து அண்ணன் சமல் கவலை!



ஆர்.சனத்-
2014 இலேயே மஹிந்த ஓய்வு பெற்றிருக்க வேண்டும்!
பதவி ஆசை ஏற்பட்டால் 'துன்பங்களும்' சூழவே செய்யும்
தம்பி மஹிந்தவின் நிலை குறித்து அண்ணன் சமல் கவலை

" ஜனாதிபதி பதவியை இரு தடவைகள் வகித்த பிறகு, மஹிந்த ராஜபக்ச, அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் இன்று எல்லா வழிகளிலும் துயரப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது."
இவ்வாறு மஹிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றிய அவர், அரசியலில் 'விட்டுக்கொடுப்பு' களை செய்யவும் பக்குவப்பட்டிருக்க வேண்டும், மாறாக பதவி ஆசையில் மூழ்கினால், இவ்வாறான சம்பவங்களுக்கு முகங்கொடுக்கவும் நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.
" 1931 இல்தான் ராஜபக்சக்களின் அரசியல் பயணம் ஆரம்பமானது. சொத்துகளை அடகுவைத்துதான் அரசியல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு அடகு வைத்த சொத்துகளை மீள பெறமுடியாமலும் போனது. அன்று முதல் இன்றுவரை அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதால்தான் அரசியலில் நீடிக்க முடிகின்றது.
தனது 50 வருடகால அரசியல் வாழ்வில் மஹிந்த ராஜபக்ச பல தியாகங்களை செய்துள்ளார். இரு தடவைகள் ஜனாதிபதி பதவியை வகித்த பிறகு, அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவ்வாறு செய்யாததால்தான் இன்று எல்லாவித துன்பங்களையும் சந்திக்க நேரிட்டுள்ளது.
எனவே, உரிய நேரத்தில் விடைபெறுவதற்கும் பழகிக்கொள்ள வேண்டும்." எனவும் சமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :