ஏறாவூர் பொலிஸ் பிரிவில் திருட்டு!



ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் 4ஆம் குறிச்சி பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள நகைத் தொழிலகம் உடைத்துத் திருடப்பட்டுள்ளதுபற்றி ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் ஆத்ம பரணீதரன் தெரிவித்தார்.
புதன்கிழமை 11.05.2022 சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பொலிஸாரும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் சோகோ பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
உடனடியாக விசாரணை மேற்கொண்டதில் 2.5 கிராம் நகை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உறவினர் ஒருவர் மரணித்ததனால் இந்த நகைத் தொழிலகம் கடந்த எட்டு நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் எட்டு நாட்கள் கழிந்த நிலையில் புதன்கிழமை வந்து கடையைத் திறந்தபோது கடை பூட்டு உடைத்து திருடப்பட்டிருப்பது தெரியவந்ததாக கடை உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த நகைத் தொழிலகத்திற்கு அருகிலுள்ள மற்றொரு நகைக் கடை கடந்த 2ஆம் திகதி பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த ஏ.ரி.எம்.வங்கி அட்டை உட்பட இன்னும் சில பொருட்கள் திருடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவங்கள் பற்றி ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :