கல்முனை கல்வி வலயத்தின் கீழுள்ள சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தரம் 1 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.எல். நாபீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி ஆசிரியர் ஆலோசகர் ஏ.சஹறூன் பிரதம அதிதியாக கலந்து கொண்டர்.
மேலும் பாடசாலை பிரதி அதிபர் எம்.எஸ்.எம். ஆரீப், உதவி அதிபர் ஏ.பீ. ஜஃபர், பகுதித் தலைவர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், அதிதிகளால் மாணவர்களுக்கு அகரம் எழுதப்பழக்கிய நிகழ்வும் இடம்பெற்ற அதேவேளை, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.
0 comments :
Post a Comment