கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் (9) ஆம் திகதி முதல் பொலித்தீன் பாவனையற்ற பாடசாலையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை சுற்றாடலை துப்புரவாக வைத்து, டெங்கற்ற சூழலை உருவாக்கும் முயற்சியில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா தெரிவித்தார்.
பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் பொலித்தீன் பொருட்களை எடுத்துவராமல் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வோம் என்று மாணவிகள் உறுதிமொழி வழங்கினர்.
பாடசாலை அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் எஸ்.பாறூக் கான் மற்றும் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment