புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம்



புதிய பிரதி சபாநாயகராக கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றியடைந்ததையடுத்து, புதிய பிரதி சபாநாயகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, 83 மேலதிக வாக்குகளால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் 65 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மயந்த திசாநாயக்க, வினோ நோக இராதலிங்கம், உத்திக பிரேமரத்ன, இம்ரான் மஹ்ரூப், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஜோன் செனவிரத்ன ஆகியோர் சமூகமளிக்கவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :