காரைதீவு மீனவர்கள் மண்ணெண்ணெய் கோரி ஆர்ப்பாட்டம்.



காரைதீவு சகா-
காரைதீவு மீனவர்கள் தமது கடற்தொழிலுக்கான மண்ணெண்ணெய் கோரி நேற்று(28) சனிக்கிழமை காரைதீவு பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அதிகாலையிலிருந்து மண்ணெண்ணெய் கொள்கலன்களுடன் நூற்றுக்கும் அதிகமான மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

"கடந்த இரு வார காலமாக மண்ணெண்ணெய் இல்லாமல் கடல் தொழிலுக்கு செல்ல வில்லை என்றும் இதனால் தங்களது ஜீவனோபாயம் முற்றாக இழக்கப்பட்டிருக்கிறது.இதனால் எங்களது மீனவர் சமூகம் நடுத்தெருவில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது" என்று மீனவர் சமூகம் சார்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர். மு.காண்டீபன் மற்றும் மு.ரவீந்திரன் த.லவன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த னர்.

சிறிது நேரத்தில் பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் மற்றும் காரைதீவு பிரதேச போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெகத் உதவி பிரதேச செயலாளர் எஸ் பார்த்திபன் ஆகியோர் அங்கு வருகை தந்து மீனவர்களுடன் கலந்துரையாடினர்.
மீனவர்கள் தங்களது மண்ணெண்ணெய் பிரச்சினையை அதிகாரிகளிடம் கூறினார்கள். அதற்கமைய காரைதீவில் இருக்கின்ற 90 மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் இங்குள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தவணை அடிப்படையில் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதேச செயலாளரும் பொலிஸ் பொறுப்பதிகாரியுமாஅங்கு உறுதியளித்தனர்.
அதனைத்தொடர்ந்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு வீடு சென்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :