நாட்டில் சமகாலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி உணவு தட்டுப்பாடு போன்ற இடர் களைய வேண்டி ஆலயங்களில் இடர் களையும் பதிகம் பாடும் பாரிய தேசிய திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரனின் ஒழுங்கமைப்பில், அம்பாறை மாவட்டத்தில் 108 தெரிவுசெய்யப்பட்ட ஆலயங்களில் இது நடைபெறவுள்ளது.
இதன் முதல் நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு ஶ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயமும், சித்தானைக்குட்டி அறநெறிப்பாடசாலையும் இணைந்து திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசையும், திருநெடுங்களத்தலத்து இடர் களையும் பதிகம் ஓதும் நிகழ்வும் ஶ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது ஆலயத்தின் தலைவர் பொன்.பாலந்திரா தலமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு உபதலைவர் க.தட்சணாமூர்த்தி, பொருளாளர் த.தவக்குமார், உபசெயலாளர் திரு செ.விஜயரெத்தினம்,நிர்வாகசபை உறுப்பினர்களான சீ.யோகராஜா, பி. கபாஸ்கர் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சிவலோஜி சிவராஜா மற்றும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மேற்கொண்டார்.
0 comments :
Post a Comment