க . பொ. த சாதரண தரப் பரீட்சைக்குத் தோன்றும் முஸ்லிம் மாணவிகள் முகத்தை மூடி பரிட்சை எழுத முடியாது!



அஷ்ரப் ஏ சமத்-
நாளை திங்கள் 23 ஆரம்பமாகவிருக்கும் க . பொ. த சாதரண தரப் பரீட்சைக்குத் தோன்றும் முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா அணிந்து பரீட்சை எழுத அனுமதி வழங்கப்படும் என்றும் முகத்தை மூடி பரீட்சை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் புதிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.சில பிரதேசங்களில் பர்தாவை அணிந்து பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என சில அதிகாரிகள் தெரிவித்திருப்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஏ. எச் எம் . பௌசி கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார் .

பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் மண்டபத்துக்கு பிரவேசிக்க முன் தலையை மறைத்திருப்பவர்கள் தமது இரு காதுகளையும் திறந்து காட்ட வேண்டும்,என்பதும் ,முகத்தை திறந்தே பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் என்றும் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.பர்தாவை அகற்றி விட்டே பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்படுவார்கள் என வடக்கிலிருந்து சில பெற்றார் முஸ்லிம் கவுன்சிலின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து,முஸ்லிம் கவுன்சில் முஸ்லிம் அரசியல் தலைமைதுவத்தின் கவனத்துக்கு இதனைக் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. என முஸ்லிம் கவுன்சிலின் தலைவா் என்.எம். அமீன் தெரிவித்தாா். வவுனியாவில் ஒர் மாணவி இவ்விடயம் சம்பந்தமாக முஸ்லிம் கவுன்சிலுக்கு கொண்டுவந்ததையடுத்தே இவ்விடயம் உரிய அதிகாரிகள் கல்வியமைச்சர் ஆகியோர்களின் கவணத்திற்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :