பெருந்தோட்டதுறையை புறக்கணிக்கப்பட்டமையினாலேயே இன்று நாட்டில் பொருளாதார நிலமை



தலவாக்கலை பி.கேதீஸ்-
ந்த நாட்டிற்கு முதுகெழும்பாக இருந்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களை இந்த அரசாங்கம் ஊக்குவிக்க தவறிவிட்டமையினாலேயே இந்த ஒரு நிலமை இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. பெருந்தோட்டத்துறைக்கு முக்கியத்தவம் கொடுத்திருந்தால் இன்று நாட்டில் டொலர் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான பி.சக்திவேல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்

எமது நாட்டிலே பிரதான ஏற்றுமதி பொருளாக தேயிலை, இறப்பர், தென்னை காணப்படுகின்றது. இதில் அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தருவதில் தேயிலையே முதலிடம் பெறுகின்றது. அந்தவகையில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் பெருந்தோட்டதுறையை உரிய முறையில்; பாராமறிக்க தவறியமையினால் இந்த டொலர் தட்டுபாடு எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். இந்த அரசாங்கம் மட்டுமல்ல இதற்கு முன்பிருந்த எல்லா அரசாங்கங்களும் பெருந்தோட்டத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை இதனாலேயே நாம் அந்நியச் செலாவணியை இழந்திருக்கின்றோம். 1979 ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் மிக முக்கிய ஏற்றுமதி பொருளாக தேயிலை காணப்பட்டது. 1979 ம் ஆண்டுக்கு பின்னர் அது தேசிய மயமாக்கப்பட்டது. இலங்கை அரசின் தலையீட்டின் காரணமாக இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு தேயிலை உற்பத்தியில் ஈடுபட தொடங்கினர் இதனால் தேயிலை ஏற்றுமதியில் இலங்கை வீழ்ச்சியை கண்டது. அந்நிய செலாவணியை அன்றே இழந்துவிட்டது. உணவுகளையோ கனிய வளங்களையோ நாம் பெற வெளிநாடுகளில் கையேந்த தேவையில்லை. இவை எல்லாம் எமது நாட்டில் இருக்கின்றது. இந்த நாட்டில் எல்லா வளங்களையும் நாம் பெற்று வாழக்கூடிய சூழல் இங்கு காணப்படுகின்றது. சிங்கபூர்,மலேசியா, சீனா போன்ற நாடுகளை பொருளாhர ரீதியில் கட்டியெழுப்ப சிறந்த தலைவர் இருந்தார்கள் ஆனால் எமது நாட்டை கட்டியெழுப்ப அவ்வாறான சிறந்த தலைவர்கள் யாரும் இல்லை. ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவருக்கு அத்துறையுடன் தொடர்பான பொறுப்புக்கள் வழங்கப்படுவதில்லை. வைத்தியர் ஒருவருக்கு வைத்தியத்துறை சார்ந்த பொறுப்புக்கள் வழங்காமல் வேறொரு துறைசார்ந்த பொறுப்புக்களை வழங்கினால் அவருக்கு அத்துறை சம்பந்தமாக என்ன தெரியும். இவ்வாறான செயற்பாடுகளே எமது நாட்டில் இருக்கின்றன. இதனாலேயே நாம் இவ்வாறான பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகின்றோம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :