அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடைகள் யாவும் சாய்ந்தமருது ஜூம்மாப்பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடைத்தொகுதியில் இரண்டாம் இலக்கக்கடை மற்றும் 12ஆம் இலக்கக் கடைகள் உடைக்கப்பட்டு ரொக்கப்பணமும் பொருட்களும் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் பொலிஸாரிடம் தெரித்துள்ளனர்.
கடை உரிமையாளர் பொலிசாரிடம் கடைக்குள் இருந்த 57ஆயிரம் பணமும் பல பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். மற்றைய தேனீர்க்கடை உரிமையானர் பொலிசாரின் விசாரனையின் போது கடை உடைக்கப்பட்டுள்ளதாகவும் பொருட்கள் ஒன்றும் களவாடப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கொள்ளை தொடர்பாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் வழிகாட்டலில் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரனைகளை முன்னெடுத்துள்ளதுடன் அம்பாறை புலனாய்வுத்துறை பொலிசார் மோப்பநாய் உதவியுடன் மேலதிக விசாரனைகளை மேற் கொண்டு வருவதுடன் அப்பகுதியிலுள்ள சிசிடி கமராக்களின் பதிவுகளைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டள்ளதாகவும் சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment