விவாதத்திற்கு அழைத்த அமைச்சர் நஸீரை கிண்டல் செய்தார் ஹக்கீம் எம்.பி : விவாத அழைப்புக்கு மௌனம் காக்கிறார் !



நூருல் ஹுதா உமர்-
முழு சமூகத்தின் அவமான சின்னமாக ஒருவர் மாறியுள்ளார் என்கின்ற வேதனை தான் எங்களுக்கு உள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த ஊரை சேர்ந்த ஒருவர் அமைச்சு பதவி எடுத்துள்ள விவகாரம் மிக மோசமான விமர்சனத்திற்கான விவகாரமாக மாறியுள்ளது என்பது சர்ச்சைக்குரிய விடயம் அல்ல.
அது ஊரும் அங்கீகரிக்கின்ற விடயம் அல்ல. ஆனால், அவர் தாமாக சென்று அரசியல் தற்கொலை செய்துகொண்டுள்ளதையிட்டு அலிசாஹிர் மௌலானாவிற்கு ஆத்ம திருப்தி இருக்கும்.
தலைமைக்கு எதிராக தாறுமாறாக பேசிக்கொண்டு திரிகின்றவர்கள் ஏன் இவற்றை அவர்கள் பிரசன்னமாக இருந்த அரசியல் உச்சபீடத்தில் கதைக்கவில்லை என்பது தான் மிக பிரச்சினைக்குரிய விடயம்.
ஒவ்வொரு அரசியல் உச்சபீடக் கூட்டத்தின் முழுமையான அதன் பதிவுகள் இருக்கின்றன. தேவை என்றால் பதிவுகள் வௌியில் கொண்டுவரப்படும். முழு சமூகத்தின் அவமான சின்னமாக ஒருவர் மாறியுள்ளார் என்கின்ற வேதனை தான் எங்களுக்கு உள்ளது.
நடவடிக்கைகள் எடுக்கும் விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டாலும் நாங்கள் சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக தான் சற்று நேரம் எடுக்க வேண்டியிருந்தது.
இருந்தாலும் இந்த விவகாரத்தில் கராரான நடவடிக்கைகளை சரியாக எடுத்துள்ளோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :