முள்ளிவாய்க்கால் அவலத்தின் 13ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) புதன்கிழமை காரைதீவில் இடம்பெற்றது .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நிகழ்வு காரைதீவு பொதுச் சந்தை கட்டிடத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
முதலில்,அங்கு நெய்விளக்கு ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின்பு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ,கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிவஞானம் ஜெயக்குமார் , காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான திருமதி.சி.ஜெயராணி, ச.சசிகுமார், தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர் தா.பிரதீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment