பொலிஸ் மா அதிபர் இராணுவ தளபதி இருவரும் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பதில் நியாயமில்லை என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று(17) ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக் காரர்களை தாக்கும் நோக்கில் அலரி மாளிகைக்கு குண்டர்களை அழைத்து ஊக்கப் படுத்தியதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது பாரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதனால் கொதிப்படைந்த ஆர்ப்பாட்டக் காரர்களால் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள சிலரது இல்லங்களுக்கும் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டு அழிக்கப் பட்டன.
இந்த வன்முறையை கட்டுப்படுத்தத் தவறி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பொலிஸ் மா அதிபரையும் இராணுவ தளபதியையும் பதவி விலகுமாறு அவ் வன்முறையை தூண்டியவர்களே கோரிக்கை விடுக்கின்றார்கள்.
இதேபோன்று நல்லாட்சி காலத்தில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளி வாசல்கள், வாகனங்கள், உடமைகள், உயிர்கள் என பல கோடி பெறுமதியான சொத்துக்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
முஸ்லிம்களின் உடமைகள் அழிக்கப்படுகின்ற போது வன்முறையாளர்களுக்கு உற்சாகம் வழங்கி அதில் அரசியல் இலாபமும் தேடினார்களே தவிர கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வில்லை.
முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டமைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட வில்லை. இதே நிலையில் இப்போது பொலிஸ்மா அதிபரும் இராணுவத்தளபதி யும் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுப்பதில் எந்த நியாயமும் இல்லை. அத்தோடு அவர்கள் பதவி விலக அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றார்
0 comments :
Post a Comment