பாக்கிஸ்தான் உயா் ஸ்தானிகா் ஆலயத்தினால் பாக்கிஸ்தான் - இலங்கை நட்புறவு நுாலகமொன்றை இன்று (30) கொழும்பு 7 ல் உள்ள குதிரைப் பந்திய மைதானத்தின் வாகன தரிப்பிடத்தில் திறந்து வைக்கபப்ட்டது. இந்நிகழவில் பாக்கிஸ்தான் உயா் ஸ்தானிகா் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாருக் புர்க்கி மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற உதய நானயக்காரவும் இணைந்து திறந்து வைத்தனா்.
இந் நுாலகத்திற்காக பாக்கிஸ்தான் உயாஸ்தானிகா் ஆலயம் 2.3 மில்லியன் ரூபாவை நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் செலுத்தி இதனை நிர்மாணித்துள்ளது. பாதையோர நுாலகம் எனப் பெயரிடப்பட்டு ரோயல் கல்லுாாிக்கு முன்பாக நிர்மாணிக்படப்டுள்ளது. இங்கு வரும் பாா்வையாளகா்கள் இங்குள்ள நுால்களை வாசிக்கவும், மேலும் நுால்களை அனபளிப்புச் செய்ய முடியும். இந் நுாலகத்தில் பாக்கிஸ்தான் - இலங்கை நுால்கள் காணப்படுகின்றன.
இங்கு உரையாற்றிய உயா் ஸ்தானிகா் -இலங்கை -பாக்கிஸ்தான் நட்புரவு இலங்கை சுதந்திரமடைந்த காலம்தொட்டு நிலவிவருகின்றது. இங்கு உள்ள நுால்களை இலவசமாக வாசிக்க முடியும். நுால்களை அன்பளிப்புச் செய்யவும் முடியும். கொழும்பு 7 ரம்மிய பகுதியில் இருந்து இதனை பயன்பெறல் வேண்டும். அத்துடன் இலங்கை பாக்கிஸ்தன் நாடுகள் பற்றிய கலை கலச்சார விழுமியங்களை அறிந்து கொள்ள முடியும். எனவும் தெரிவித்தாா்.
0 comments :
Post a Comment