பொருளாதார நெருக்கடியில் இருந்து அம்பாறை மாவட்ட மக்களை மீட்டெடுக்கின்ற விசேட மனித நேய வேலை திட்டம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுதொண்டு அமைப்புகளின் பங்களிப்புடன் இராணுவத்தின் அம்பாறை மாவட்ட கட்டளை தலைமையகத்தால் முன்னெடுக்கப்படுகின்றது.
சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த தொண்டு நிறுவனங்களின் 63.75 மில்லியன் ரூபாய் மனித நேய நிதியில் 42,500 குடும்பங்களை இலக்கு வைத்து எல்லைகளை கடந்த அன்பு என்கின்ற மகுடத்திலான வெசாக் பண்டிகை கால மனித நேய வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதன் ஆரம்ப விழாவும், காரைதீவு பிரதேச மக்களுக்கான உலர் உணவு பொதிகள் கையளிப்பு வைபவமும் காரைதீவு பிரதேசத்துக்கான இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சமில் நிசானின் ஒழுங்கமைப்பில் மாவட்ட கட்டளை தளபதி உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகள், சர்வ சமய தலைவர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றன.
இந்து சமயத்தை பிரதிநிதித்துவம் செய்து காரைதீவு சிவசக்தி குடைச்சாமி சர்வமத பீடத்தின் தலைவர் கொடைச்சாமி ஜீவாகர சுவாம்ஜி கலந்து கொண்டு இவ்வைபவத்தை ஆசிர்வதித்தார். இவர் அடங்கலான பேராளர்கள் பயனாளிகளுக்கு உலர் உணவு நிவாரண பொதிகளை வருமானம் குறைந்த மற்றும் வறிய குடும்பங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 500 பயனாளி குடும்பங்களுக்கு கையளித்தார்கள்.
0 comments :
Post a Comment