அமைச்சர் அலி சப்ரியை பிரதமராக ஜனாதிபதி நியமிப்பதன் மூலமாக நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவது சாத்தியம் - இப்படி கூறுகின்றார் கிழக்குதேசம் வஃபா பாருக்



மைச்சர் அலி சப்ரியை பிரதமராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ நியமிப்பதன் மூலம் இந்நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முடியும் என்று கிழக்கு தேசம் இயக்கத்தின் தலைவர் வஃபா பாருக் தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை புதிய பிரதமர் தலைமையில் அமைச்சரவை புதிதாக உருவாக்கப்படுகின்றது என்று வெளியாகி வருன்ற செய்திகள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று சனிக்கிழமை கருத்து கூறியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ மிக முக்கியமான தீர்மானத்தை எடுக்க வேண்டிய கட்டத்தில் உள்ளார். நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவதற்கு உகந்த தீர்மானத்தை அவர் எடுக்க வேண்டும். அதுவே தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு முயற்சிகளை இலகுவாக்கும்.

இனவாதம் அற்ற அரசாங்கம் ஒன்றை அவர் உருவாக்க வேண்டும். அதன் பிரதமராக தற்போதைய நிதி அமைச்சரும், நீதி அமைச்சருமான அலி சப்ரியை அவர் நியமிக்க வேண்டும். அரபு நாடுகள் அடங்கலாக சர்வதேச சமூகத்தின் உண்மையான நம்பிக்கையை வெல்வதற்கு இது வழி அமைத்து கொடுக்கும்.
சர்வதேச சமூகத்தின் உண்மையான நம்பிக்கையை வெல்வதன் மூலமாக மாத்திரமே நாடும், மக்களும் தற்போது எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை எட்ட முடியும். உரிய தீர்வுகள் கிடைக்கின்றபோது மக்கள் அமைதி அடைவதுடன் ஆட்சியாளர் மீது நம்பிக்கை வைப்பார்கள்.
ஜனாதிபதி கோத்தாபய இவ்வாறான ஒரு மன நிலையிலேயே தற்போது இருக்க கூடும். ஏனென்றால் அவர் மிக நுட்மான வழி வகைகளில் அலி சப்ரிக்கு கூடுதல் அதிகாரங்களை வ்ழங்கி இருக்கின்றார். அலி சப்ரி இவற்றுக்கு பொருத்தமானவரும் ஆவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :