தேசிய இளைஞர் கொள்கைகளை மறுசீரமைக்க இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மட் ரிமாஸ் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை



சில்மியா யூசுப்-
தேசிய இளைஞர் கொள்கைகளை மறுசீரமைக்க இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மட் ரிமாஸ் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை.

இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார ஆலோசனைக்குழு அமைச்சினுடைய, மாத்தளை மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஆர். மொஹமட் ரிமாஸ் ரணில் விக்ரமசிங்கவுடன் அண்மையில் சிறிகொத்தயில் சந்தித்து தேசிய இளைஞர் கொள்கைகளை மறுசீரமைக்க கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

நாம் நெருக்கடிகளின் நடுவில் இருக்கும்போது, ​​முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி, நாம் மீண்டும் கட்டியெழுப்பவும், மறுபரிசீலனை செய்யவும், மறுசீரமைக்கவும் தொடங்க வேண்டும். நிச்சயமாக, இளைஞர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப தேசிய இளைஞர் கொள்கைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என ரிமாஸ் குறிப்பிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில், முன்னாள் பிரதமர் ரணில் இலங்கை அடையாளத்தை உருவாக்குவதற்கான அவரது பொதுவான தாெலை நாேக்கு சிந்தனை, பரந்த அறிவு, அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பரந்த அளவிலான அம்சங்களில் நிபுணத்துவத்தை கலந்தாலோசித்திருந்தார்.

மேலும் தற்பாெழுது முகம் கொடுத்து இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான வழிமுறைகள், முற்போக்கான பார்வைகள் மற்றும் சமகால இளைஞர்களின் தேவைகள், நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப பலனளிக்கும் கருத்துக்கள், முதலியன கலந்தாலோசிக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :