பூம் இயந்திரம் கவிழ்ந்ததில் ஒருவர் பலி



தலவாக்கலை பி.கேதீஸ்-
வெட்டிய மரங்களை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் லொறி (பூம் இயந்திரம்) இன்று (23) திங்கட்கிழமை காலை வீதியைவிட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில்,ஒருவர் உயிரிழந்ததுடன்,மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நானுஓயா ரதெல்ல வங்கிஓயா கீழ் பிரிவு தோட்ட வீதியில்,இவ்விபத்து இடம்பெற்றதாக,நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் உயிரிழந்தவர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இன்று (23) காலை நானுஓயா ரதெல்ல தோட்டத்தில் வெட்டிய மரங்களை ஏற்றுவதற்கும் இழுப்பதற்கும் வங்கிஓயா கீழ்பிரிவு தோட்டத்திலிருந்து ரதல்ல நோக்கிச் சென்றுகொண்டிருந்த குறித்த வாகனமே, விபத்துக்குள்ளானது.இதில் பயணித்த சாரதி உட்பட ஐவரில் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகினர். இவர்கள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :