தவறுகளை ஏற்று புதிய பாதையிலே பயணிக்கும் ஜனாதிபதி கோத்தா பாராட்டுக்கு உரியவரேதான்- கிழக்குதேசம் வஃபா பாருக் அறிக்கை



வறுகளை ஏற்று கொண்டு புதிய பாதையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ பயணிக்க தொடங்கி உள்ளார் என்று கிழக்கு தேசம் வஃபா பாருக் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருளாளரான இவர் பிரதி சபாநாயகர் தெரிவு தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டு உள்ளவை வருமாறு

4-5 உறுப்பினர்களின் வித்தியாசத்தால் பிரதி சபாநாயகர் தெரிவில் இம்தியாஸ் பாக்கீர் மக்கார் தோல்வி அடைந்திருந்தால் எதிரபாராதது என ஜீரணிக்கலாம்.
அல்லது தகுதியில்லாத ஒருவர் பிரதி சபாநாயகராக போட்டியிட்டிருந்தாலும் தோல்வியை நியாயப்படுத்தலாம்.
இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை விட சிறந்த வேட்பாளர் வேறு எவரும் இன்றைய பாராளுமன்றத்தில் கிடையாது என்று நான் விசுவாசிக்கின்றேன். சபாநாயகராக பதவி இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மிக பொருத்தமானவர் என்பதை மொட்டுக்கட்சியில் இருப்போரும் ஏற்று கொள்வார்கள்.
இவ்வளவு சிறப்பான வேட்பாளரை நிறுத்தியும் படு தோல்வி அடைந்தது சஜித்தின் அரசியல் வியூகத்தின் ஒட்டுமொத்த பலவீனத்தையே காட்டுகின்றது.
83 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றார்.

இது சஜித்தின் கற்றுக்குட்டித்தனத்தால்தான் நிகழ்ந்திருக்கின்றது. மிக முட்டாள்தனமான காரியத்தை வெற்றிகரமாக சஜித் செய்து முடித்து இருக்கின்றார். தோல்வி நிச்சயிக்கப்பட்ட போட்டியில் வெல்ல முடியாவிட்டாலும் தோல்வியை தவிர்க்க முயற்சித்து இருக்கலாம். அதுதான் அரசியல்.
பாராளுமன்றத்தின் நாடியை பிடித்து பார்க்காமல் வேட்பாளரை களம் இறக்கியது பாரிய தவறு. ஜனாதிபதியும், நிதி அமைச்சரும் மாறி மாறி தவறுகளை ஏற்று கொள்ள ஆரம்பித்தபோதே மொட்டு கட்சி அதன் ஆடுகளத்தை வேறோர் தளத்துக்கு நகர்த்துகின்றது என்பது சஜித்துக்கு
புரிந்திருக்க வேண்டும்.
அனுர குமார திசநாயக்கவின் குற்றச்சாட்டுகள் சஜித்தும் ஊழல்வாதிதான் எனற தோற்றப்பாட்டை உருவாக்கி ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் மானசீக வலுவை இழக்க செய்து விட்டன. சஜித்தும் வீட்டுக்கு போக வேண்டும் என்பது உளவியல் கோசமாக உருவாகி உள்ளது. சஜித் செய்து இருந்தால் குற்றம் இல்லை என்று எந்த முட்டாளும் ஏற்க மாட்டான்.
இருபது நாட்கள் ஜனாதிபதி செயலகம் சுற்றி வளைக்கப்பட்டும் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கவில்லை. 'எதிர்ப்பு காட்டுகின்ற மக்களை ஆராதித்து கொண்டிருக்கும் ஜனாதிபதியின் இன்னொரு முகத்தை சிலாகிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :