சஜித்தின் தீர்மானம் அடுத்த தேர்தலில் எதிரொலிக்கும்.- மஹ்தி



ஹஸ்பர்-
ற்போது நாடு முகங்கொடுக்கும் அரசியல், பொருளாதார ரீதியான நெருக்கடிகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச எடுத்திருக்கும் தீர்மானம் பாரிய விமர்சனங்களுக்கு உள்ளானாலும் அடுத்த தேர்தலில் அது எதிரொலிக்கும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம் .எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (15) வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்
பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டிருந்த பொது ஜன பெரமுனவின் சவால்களுக்கு மத்தியில் அவர்களின் கொள்கைகளுக்கு எதிரான சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்றிருந்தால் தமது பெரும்பான்மையை நிரூபிப்பதிலும் அரசை தொடர்ந்து கொண்டு செல்வதிலும் சவால்கள் இல்லாமல் இருக்காது.

கோட்டா பதவி விலகாத நிலையில் ஊழல் வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாது. போராட்டக் காரர்களினதும் நாட்டு மக்களினதும் எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றத்தை வழங்க முடியாது.

குறைந்த எண்ணிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க் கட்சியாக இருந்தும் கத்திகளுடனும் மிளகாய்த் தூளுடனும் தண்ணீர் போத்தல்களுடனும் கதிரைகளை தூக்கி வீசும் அனுபவத்வதை கொண்டவர்களுக்கு மத்தியில் சுமுகமான பலமான ஒரு ஆட்சியை எதிர்பார்க்கவே முடியாது என்பது சிறுபிள்ளைகளுக்கும் தெரியும்.
இந் நிலைமையில் அரசை பொறுப்பெடுத்து தொடர் குழப்பங்களோடும் விமர்சனங்களோடும்கொண்டு சென்று நாட்டை குட்டிச்சுவராக்கி அரசியல் தற்கொலை செய்ய முடியாது.

அதனால் தான் இந் நிலைமையில் அரசை பொறுப்பெடுப்பதானால் ஜனாதிபதி பதவி விலகவேண்டும். பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். விரைவில் தேர்தலை நடத்த வேண்டும்.19 ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் இந்த முடிவு தற்போது பிழையாக தென்பட்டாலும் அடுத்த தேர்தலில் அதன் யதார்த்தம் பிரதிபலிக்கும் எனவும் கூறியுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :