நாட்டில் என்ன நடக்கின்றது என்ற மாயவித்தை ஒன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.பாராளுமன்றம் கூடி கலைவது தான் இந்நாட்டின் செயல்பாடாக இருக்கின்றதே தவிர நாட்டு மக்களின் பொருளாதார பிரச்சினைக்கு எவ்வித தீர்வுகளும் காணப்படவில்லை என இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க ஆலோசகர் எம்.ஹூசைன் முபாறக் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைமைக் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(1) சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் சமகால அரசியல் நிலைமை தொடர்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
நாட்டில் என்ன நடக்கின்றது என்ற மாயவித்தை ஒன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.பாராளுமன்றம் கூடி கலைவது தான் இந்நாட்டின் செயல்பாடாக இருக்கின்றதே தவிர நாட்டு மக்களின் பொருளாதார பிரச்சினைக்கு எவ்வித தீர்வுகளும் காணப்படவில்லை.வரிசைகளில் இருந்து தேவைகளுக்காக செல்கின்ற மக்கள் நாளுக்கு நாள் இறந்து கொண்டு இருக்கின்றார்கள்.உண்பதற்கு கூட வசதி இல்லாமல் மக்கள் வறுமை நிலையில் வாழ்க்கின்றார்கள்.
தீப்பெட்டி கூட வாங்குவதற்கு 40 ரூபா தேவைப்படுகின்றது.இவ்வாறு பொருளாதார நெருக்கடியானது மக்களை மரண அறையில் நெருக்கிக்கொண்டிருக்கின்றது.அமைச்சரவையும் அரசியல்வாதிகளும் பாராளுமன்றமும் பிரயோசனமற்ற முறையில் உள்ளது.இளைஞர்கள் இன்று கிளந்தெழுந்துள்ளார்கள்.
இச்செய்தியாளர் சந்திப்பில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க வட மாகாண இணைத்தலைவர் ஆறுமுகம் புண்ணியமூர்த்தி இஅகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன்இஉட்பட அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment