தேசிய காங்கிரஸ் ரணிலை ஆதரிக்கும்.-மர்சூம் மௌலானா



நாட்டுமக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை கையாள்வதற்காக,
நாட்டின் ஜனாதிபதி புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ள இவ்வேளையில் தேசிய காங்கிரஸ் இது தொடர்பில் முக்கிய தீர்மானங்களை எட்டுவதற்காக அதன் உயர் பீடம், தேசிய காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  அல் ஹாஜ் ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்களின் தலைமையில் இன்று கூடியது.
 
சவால்களை எதிர்கொள்ள புதிய பிரதமர் நியமனத்திற்கு பாராளுமன்றத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு  பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் தேசிய காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட உத்தியாேக பூர்வமான கடிதம் தொடர்பிலும் கட்சியின் உயர் பீடத்தில் இன்று விரிவாக ஆராயப்பட்டது.
 
நாடு தற்பாேது எதிர்கொள்ளும் தேசிய பொருளாதார நெருக்கடியை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக தேசிய காங்கிரஸ் பார்ப்பதோடு மட்டுமன்றி , நமது நாட்டு மக்களுக்காக அவை அனைத்தும் அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. எனவே தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய பிரதமரின் செயற்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான முடிவினை தேசிய காங்கிரஸின் உயர்பீடம் எட்டியுள்ளது.
 
மேலும் பாராளுமன்றத்தில் ஒன்றாகச் செயற்படும் சக பத்துக்
கட்சிகளாேடு இணைந்து தேசிய காங்கிரஸின் கொள்கைகளுக்கு அமைவாக ஒவ்வாெரு விடயதானத்தையும் தனித்தனியாகக் கருத்திற் கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கும் கட்சி உயர் பீடம் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.!

சட்டத்தரணி மர்சூம்
மௌலானா
தேசிய காங்கிரஸின்
சட்டம் மற்றும் கொள்கை விவகார ஆலோசகர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :