இந்த விமர்சனங்களை மறுக்க முடியாது ஏனெனில் மனச்சாட்சியே இல்லாத அரசியல்வாதிகளால் அதிகாரங்களை மட்டும் இலக்காகக்கொண்டு காய் நகர்த்துகின்ற அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால் அரசியலில் நரி என்று அழைக்கப்படுகின்ற ரணில் விக்ரமசிங்கவுக்கு இது பற்றி தெரியாமலிருக்குமா ? அதற்காக மாற்று நடவடிக்கை எடுக்கமாட்டாரா ?
ரணில் பிரதமரானதும் “கோட்டா கோகம”வை அகற்றக்கூடாதென்று அவர் பகிங்கரமாக கூறியிருந்தார். இது ரணிலுக்கு தேவைப்பட்ட பாதுகாப்பு வேலி என்று எடுத்துக்கொண்டோம்.
அத்துடன் நேற்று பாராளுமன்றத்தில் லக்ஸ்மன் கிரியெல்ல ஒரு விடயத்தை கூறியிருந்தார். அதாவது “ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச அதிகாரத்தில் இருக்கும் வரைக்கும் சர்வதேச நாணய நிதியம் உட்பட உதவி செய்கின்ற நாடுகள் பாரிய நிதி உதவிகளை வழங்க மறுத்துள்ளது” என்பது அந்த விடையமாகும். இதற்கு அரச தரப்பிலிருந்து எந்தவித மறுப்பும் கூறப்படவில்லை.
இதன்மூலம் சில சந்தேகங்கள் வலுக்கின்றது. அதாவது மேற்கு நாடுகளின் முகவரான ரணில், தனது பிரதமர் பதவியை பாதுகாத்துக்கொண்டு ஜனாதிபதி பதவியை அடைவதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேசத்தில் உள்ள தனது நற்பு நாடுகள் மூலமாக இவ்வாறான காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றாரா என்பதுதான் அந்த சந்தேகமாகும்.
பதவியேற்ற நாளிலேயே “கோட்டாகோகம” அகற்றப்படக் கூடாதென்ற ரணிலின் அறிவிப்பையும், தற்போது கோட்டபாய ஜனாதிபதியாக இருக்கும் வரைக்கும் உதவி செய்ய முடியாதென்ற சர்வதேசத்தின் அறிவிப்பையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டு நோக்கினால் நாங்கள் சந்தேகப்படுவதில் தவறில்லை.
எனவேதான் கடந்த இரண்டு தசாப்தங்களாக முஸ்லிம் காங்கிரசை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொண்டு நிழல் தலைமைத்துவம் வழங்கிய முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஜனாதிபதி பதவியை நோக்கிய இலக்கு வெற்றியளிக்குமா ? இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்கள் மீள்வதென்றால் கோட்டா பதவி விலகுவாரா ? சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பினால் “கோட்டாகோகம”வின் மக்கள் எழுச்சி இன்னும் வீரியமடையுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment