அம்பாறை மாவட்ட சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்



ட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர் எம்.ஜே.எம்.சஜீத் அம்பாறை மாவட்ட சமாதான நீதவானாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச். முஹம்மட் ஹம்சா முன்னிலையில் இன்று (18) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

தனது ஆரம்ப கல்வியை அட்டாளைச்சேனை அல் - அர்ஹம் வித்தியாலயத்திலும் உயர்கல்வியினை அட்டாளைச்சேனை (தேசிய பாடசாலை) முஸ்லிம் மத்திய கல்லூரியிலும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வெளிவாரி இதழியல் கற்கை நெறியினையும் பயின்றுள்ளார். அல் - ஸஹீட் இளைஞர் கழகத்தின் முன்னாள் தலைவராகவும், பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் சிவில் பாதுகாப்பு குழு உதவிச் செயலாளராகவும் மேலும் பல சமூக அமைப்புகளினதும் பல பதவிகளை வகித்து வருகிறார்.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் கணிணி சேவை உதவியாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இவர் எம்.எச்.எம்.ஜஃபர் மற்றும் உதுமாலெப்பை உசையுமா ஆகியோரின் மூத்த புதல்வரும் ஆவார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :