ஸீறா பவுன்டேசன் ஸ்ரீ லங்கா அமைப்பினால் வருடா வருடம் அமைப்பின் சர்வதேச மற்றும் உள்ளுர் நல்லுள்ளங்களின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் நிகழ்வானது தொடர்ந்தேச்சியாக பத்தாண்டுகடந்து இம்முறையும் தனது சேவைகளை செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் கொவிட்19 தாக்கத்தினதும், அசுர வேகத்தில் நாளுக்கு நாள் ஏறிவருகின்ற பொருளாதார நெருகடி காரணமாக சர்வதேசமும், எமது நாடும் முடங்கிக்கிடக்கின்ற இக்கால கட்டத்தில் வருமானம் எதுவுமின்றி நிர்க்கதியாகியுள்ள சாய்ந்தமருது - மாளிகைக்காடு பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின் மற்றும் இமாம்களுக்கு (30) ஆம் திகதியன்று சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியில் அமைந்துள்ள ஹுதா பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வில் பெருமதி வாய்ந்த ஒரு தொகை உலர் உணவும், பணத்தொகையும் வழங்கி வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய சமூக இடைவெளிபேனி இந்நிகழ்வானது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் யூ.கே. காலித்தீனின் தலைமையிலும், அமைப்பின் சிரேஷ்ட தலைவைர்களில் ஒருவரான அல் ஹாபில் மௌலவி நப்றாஸ் ஹனிபாவின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்றது.
நிகழ்வில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு கதிப் முஅத்தின் சம்மேளத்தின் தலைவர் எம்.ஐ.எம். ஆதம்பாவா, ஸீறா பவுன்டேசன் ஸ்ரீ லங்கா அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோருடன் கதிப் முஅத்தின் சம்மேளனத்தின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது வளவாலராக கலந்துகொண்ட அஷ்ஷெய்க் ஏ.எம். மஹ்ருப் (ரஹிமி) கலந்து கொண்டு விஷேட சொற்பொழிவினை நிகழ்த்தி கதிப் முஅத்தின் மார்களுக்கு பொதிகளையும் வழஙகி வைத்தமை சிறப்பம்சமாகும்.
இறுதியில் ஒருஙகிணைப்பாளர் யூ.கே.காலித்தினின் நன்றி உரையுடனும் அஷ்ஷெய்க் ஜினான் சஹ்தின் உருக்காமான துஆப் பிராத்தனையுடனும் முடிவுற்றது.
0 comments :
Post a Comment