திருகோணமலை-தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான நீர் இரைக்கும் பம்பிகள்,தையல் இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது நேற்று (18) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து 03 மில்லியன் ரூபா பெறுமதியான "கமசமக பிலிசந்தரக்" வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் தற்போதைய நிலையில் உள்ளூர் பயிர்ச் செய்கைகளை ஊக்கு விக்கவும் உற்பத்திகளை அதிகரிக்கவும் குறித்த பயனாளிகளுக்கு நீர் பம்பிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் 25 நீர் இரைக்கும் பம்பிகளும்,1 தையல் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது உரையாற்றிய பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தற்போதைய நிலையில் உள்ளூர் உணவு உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் .மரவள்ளி வகை போன்றன செய்கையும் எமது பிரதேசத்துக்கு உகந்த நிலையில் உள்ளது இது போன்ற உற்பத்திகளை மேம்படுத்தவும் இது போன்றவற்றை பயன்படுத்தி பயன் பெறுமாறும் பயனாளிகளை கேட்டுக் கொண்டார்.
இதில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.நிஹாத் உட்பட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment