நல்லமல்களில் நம்பிக்கை வைத்துநாட்டு நிலைமைகள் நீங்க பிரார்த்திப்போம்.



-பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் நஸீர் அஹமட்-

ருள்பொழிந்த புனித மாதத்தில், நாம் செய்த நல்லமல்கள் இன்னும் இதர நற்செயல்களை எல்லாம்வல்ல அல்லாஹுத்தஆலா பொருந்திக் கொள்ள பிரார்த்திப்பதாக சுற்றாடல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ஹாபிஸ் நஸீர்அஹமட் தெரிவித்துள்ளதாவது.

நோன்பு என்பது ஒரு முஸ்லிமை இறைநம்பிக்கையில் புடம்போட்டு அவனது ஈமானை பட்டைதீட்டுகிறது. நோன்பின் மகத்துவம் பற்றி பெருமா னாரின் அறிவிப்புக்கள் பல உள்ளன. இதன் இரகசியங்களை அல்லாஹ் மட்டுமே அறிந்தவனாக இருக்கிறான். இவ்வளவு பெறுமதிமிக்க புனித மாதம் எம்மைக் கடந்து விட்டது. இருந்தாலும், இம்மாதத்தில் நாம் பெற்ற ஈமானியப் பயிற்சிகளூடாக ஏனைய மாதங்களை கழிப்பதற்கு வல்ல நாயன் "அழ்ழாஹ்" அருள்பாலிப்பானாக.

இவ்வாறு, நாம் பிரார்த்திப்பதுடன் நின்றுவிடாது,நமது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் நீங்கவும் நாம் பிரார்த்திக்க வேண்டும். மக்கள் எல்லோரும் அனுபவிக்க நேர்ந்துள்ள இந்த நெருக்கடிக்கு,எவராலும் தனியாக நின்று தீர்வுகான இயலாது. தனிப்பட்ட ரீதியில், எவரது தலையிலும் இதைச்சுமத்துவதோ, அல்லது பொறுப்பேற்குமாறு கோருவதோ சமூகப்பொறுப்பை மீறுவதாக அமையும்.

எனவே கட்சி,அரசியல் என்ற பேதமின்றிப் பிரியாமல், கூட்டாகப் பணியாற்றி எமது மக்களின் துயர் போக்க சகலரும் முன்வர வேண்டும். இந்த மனநிலைகள் ஏற்படுவதற்காக நாம், இந்தப் பெருநாளில் பிரார்த்திப் பது அவசியம்.

கூட்டுப்பொறுப்பும் பொது நலமும்தான் இந்த நிலைமைகளை விரட்டியடிக்கும். இந்தப் பொறுப்பிலிருந்து விலகி நடப்பது, விசுவாசிச் சமூகமான எமக்கு பொருத்தமுடையதல்ல. எனவே, நமது நல்லமல்களில் நம்பிக்கை வைத்து நாட்டு நிலைமைகள் நீங்க பிரார்த்திப்போமாக. இன்று பெருநாளை கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு ஈத்முபாறக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :