சம்மாந்துறை பிரதேச மக்களுக்காக உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
மது குடும்பத்தினதும் நாட்டினதும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்டஅரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் கீழ் சம்மாந்துறைபிரதேசத்திலுள்ள ஒவ்வொரு வீடுகளிலும் வயல் மற்றும் மேட்டுக் காணிகளிலும் வீட்டுத் தோட்டச் செய்கை, உப உணவு உற்பத்திகளை மேற்கொள்ளல் போன்ற வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா அவர்களின்தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று(27) நடை பெற்றது.
பிரதேச செயலக முற்றத்தில் பிரதேச செயலாளர் அவர்களினால் உப உணவு நாற்றுக்கள் நட்டுவைக்கப்பட்டது .

இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர், ஏ.எம்.எம் நௌஷாட் ,உதவித்திட்டமிடல் பணிப்பாளர்ஏ.எல்.ஏ மஜீட் , சம்மாந்துறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன்,கிராம நிலதாரிநிருவாக உத்தியோகத்தர் , விவசாய போதனாசிரியர்கள் , சமூகசேவை உத்தியோகத்தர் ,,சமுர்த்திகருத்திட்ட முகாமையாளர் ,சமுர்த்தி முகாமையாளர்கள் ,விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராமசேவக உத்தியோகத்தர் ,முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் மகளிர் அபிவிருத்திஉத்தியோகத்தர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :