சம்பந்தப்பட்ட விடயங்களின் தீவிர தன்மையைக் கருத்திற்கொண்டு, அரசியலமைப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறும் வகையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்துதியுள்ளார்.
அதன்படி இந்த வன்முறை சம்பவங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் மற்றும் அதன் பின்னனியில் இருந்தவர்கள் குறித்து கண்டறிந்து அவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நாட்டின் சட்டங்களை மீறும் வகையில் ஒரு சில குழுவினரால் அமைதியான போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள், நாடு முழுவதிலும் வன்முறைச் செயல்கள் இடம்பெற வழிவகுத்துள்ள நிலையில் நேற்று இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணி குறித்து விசாரணைகளை நடத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே இது தொடர்பான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கி விரைவாக விசாரணைகளை முடிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment