திருகோணமலை துறைமுகத்தை அண்டிய கடற்பிரதேசம் தற்போதைக்கு முழுமையாக மீனவர்களின் படகுகளைக் கொண்டு முற்றுகையிடப்பட்டுள்ளது.
சுமார் 150 படகுகளில் ஒரு படகில் தலா எட்டுப் பேர் வீதம் மீனவர்கள் ஒன்றுதிரண்டு கடற்பிரதேசத்தில் வளையம் அமைத்து முற்றுகையிட்டுள்ளனர்.
கடற்படைக் கப்பல் மூலம் ராஜபக்ஷ குடும்பம் தப்பிச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சியை முறியடிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்படையின் டோரா வள்ளம் ஒன்றிற்குள் ராஜபக்ஷ குடும்பம் தற்போதைக்கு ஏறி உள்ளே பதுங்கிக் கொண்டு தப்பிச் செல்ல தருணம் பார்த்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலையின் அயல்புற மீனவர்களும் தங்கள் படகுகளுடன் திருமலைத் துறைமுக முற்றுகைக்கு வந்து ஒத்துழைப்பு வழங்குமாறு போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment