கல்முனை ரோட்டரி கழகத்தினால் சாய்ந்தமருது GMMSக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !



நூருல் ஹுதா உமர்-
சதிகுறைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பிரதேச முக்கியஸ்தர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் 85 பேருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கல்முனை ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் இன்று பாடசாலையில் நடைபெற்றது.

அவுஸ்திரேலிய வெஸ்டர்ன் கிரீக், கெண்பெர நகர ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவரும் "ரோட்டரி கழக மீண்டும் பாடசாலைக்கு திரும்புதல்" வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்முனை ரோட்டரி கழக தலைவர் ரோட்டேரியன் எஸ். புஸ்பராஜா, செயலாளர் ரோட்டேரியன் சிவபால சுந்தரம், ரோட்டரி கழக உறுப்பினர்களான ரோட்டேரியன் பொறியியலாளர் கிருஷ்ணமூர்த்தி, ரோட்டேரியன் சிதம்பரநாதன், ரோட்டேரியன் வி. விஜயஷாந்தன், ரோட்டேரியன் திருநாவுக்கரசு, பாடசாலை உதவியதிபர் எம்.ஏ.சி.எல். நஜீம், பகுதித்தலைவர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஏறத்தாள 1.8 மில்லியன் ரூபாய் செலவில் 16 பாடசாலைகளுக்கு கல்முனை ரோட்டரி கழகம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :