நாட்டில் தற்போது அரங்கேறும் அனைத்து சம்பவங்களும் ஓய்வுக்கு வர வேண்டுமாயின் ஜனாதிபதியும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அனைத்து பதவிகளையும் துறந்து வீடு செய்வதே தவிர வேறில்லை என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் .மஹ்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (11) பதிவிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் மிகத் தீவிரம் அடைந்து கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கு சிகிச்சைகள் பெறும் வாய்ப்பும் மறுக்கப் படுகின்றது.
எதிர்காலத்தில் அவர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை, உணவகங்கள், வைத்தியசாலைகள், சூப்பர் மார்க்கெட்டுகளின் சேவைகளை கூட பெறுவதில் புறக்கணிக்கப் படுவார்கள்.
எனவே ஜனாதிபதி உட்பட அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது அனைத்து பதவிகளில் இருந்தும் உறுப்புரிமைகளில் இருந்தும் உடனடியாக இராஜினாமா செய்து அனைத்து பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டு வாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
0 comments :
Post a Comment